
புதுடில்லி: 'இஸ்ரோ' தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், பணி ஓய்வு பெற்றதை
தொடர்ந்து, புதிய தலைவர் நியமிப்பதற்கான பரிசீலனை நடந்தது. இதன் முடிவில்,
இஸ்ரோ அமைப்பில் 1975ம் ஆண்டு முதல் பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த
விஞ்ஞானி, கிரண் குமார், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்,
மூன்று ஆண்டு காலம் பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரண்குமார், கர்நாட காவை சேர்ந்தவர்.
'இஸ்ரோ'வின் செயற்கைக்கோள்
பயன்பாட்டு மையத்தில் இயக்குனராக பணியாற்றி வரும் கிரண் குமார்,
மங்கல்யான், சந்திரயான் திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.