சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி


முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 43


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Chief Manger (Law)- 03
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

2. Chief Manger (IT)- 06
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

3. Senior Manager (IT)- 18

4. Senior Manager(Statistician)- 01
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

5. Technical Officer (Civil)- 11

6. Technical Officer (Electrical)- 04
வயதுவரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம், பொறியியல் துறையில் இளங்களை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள்விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.50. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/downloads/recruitment/Spec_Officers_2014_15/ADVERTISEMENT-Specialist%20Officers_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.