தாமதமாகும் பொங்கல் போனஸ்:அரசு ஊழியர்கள் கொதிப்பு

மதுரை:தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடக்கும் நிலையிலும் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். இதையடுத்து ஆண்டுதோறும் பொங்கல்
போனஸாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தலா ரூ.3000, உயர் அதிகாரிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு பொங்கல் போனஸ் அறிவிப்பை முதல்வர் பன்னீர்செல்வம் ஜன.,8 ல் வெளியிட்டார். கடந்தாண்டு பொங்கல் போனஸ் ஜன.,12ல் வழங்கப்பட்டது. இந்தாண்டு பொங்கல் முடிந்த நிலையிலும் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக அடுத்த வாரம்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் கருவூலத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு மட்டும் பொங்கல் போனஸ் கிடைத்துள்ளது.