ராணுவ தரவரிசை பட்டியல்: இந்தியாவிற்கு 4-வது இடம்

உலகின் மிகச்சிறந்த ராணுவ பட்டியலில் இந்தியா நான்காவதுஇடம் பெற்றுள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும் இரண்டாம்இடத்தை ரஷ்யா மூன்றாமிடத்தை சீனாவும், நான்காமிடத்தை இந்தியாவும் பெற்றுள்
ளது. ராணுவத்திற்காக அமெரிக்கா செலவிடும் தொகை சுமார் ஆண்டு ஒன்றிற்கு 612 பில்லியன் டாலர்
ஆகும். சீனாவின் ராணுவ பட்ஜெட் 126 பில்லியன் டாலராகும். இந்திய ராணுவத்தின் செலவு 46 பில்லியன் டாலராகும். அதே நேரத்தில் ராணுவத்திற்கான செலவை குறைத்து வரும் பிரான்ஸ் நாட்டின் ராணுவ செலவு ஆண்டு ஒன்றிற்கு 43 பில்லியன் டாலராகும்.மேலும் இங்கிலாந்து நாடு ஆண்டு ஒன்றிற்கு 54 பில்லியன் டாலரை செலவழித்து வரும் நிலையில் வரும் 2018-ம் ஆண்டு முதல் ராணுவ செலவை குறைக்க முடிவு செய்துள்ளது.