குரூப்-2 ஏ தேர்வு: காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்

குரூப்-2 ஏ தேர்வு: காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்- டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14-ஆம் ஆண்டுகளுக்கான குரூப்-2 ஏ அடங்கிய நேர்முக தேர்வு அல்லாத பதவிக
ளான உதவியாளர், நேர்முக உதவியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்று அனைத்து பிரிவுகளை சார்ந்த 2 ஆயிரத்து 508 காலிப்பணியிடங்களுக்கு முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு கடந்த டிசம்பர் 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் இப்பதவிக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு மீதமுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இனவாரியாகவும், துறை வாரியாகவும் தேர்வாணைய இணையதளத்தில் அன்றே வெளியிடப்படுகின்றது. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளத்தில் கலந்தாய்வு முடிவில் அன்றைய தினம் வெளியிடப்படும் இனவாரியான எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை ஆராய்ந்து உறுதிசெய்து, அவரவர் பிரிவில் காலிப்பணியிடங்கள் இருந்தால் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் நாளில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.