பிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை

பிளஸ் - 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிளஸ் - 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., மாதம் துவங்க உள்ள
நிலையில், தேர்வு மையங்கள் அமைப்பது, செய்முறைத்தேர்வு ஆசிரியர்கள், இணை மையங்கள், மாணவர்கள் பாடவாரியாக மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை உடனடியாக அனுப்புவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

              இதன் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள், செய்முறைத்தேர்வு தேர்வு மையங்கள், அதில் இணைப்பு பள்ளிகளாக தேர்வெழுதும் பள்ளிகள், செய்முறை தேர்வுக் குழு எண், பாடவாரியாக தேர்வு நடத்தும் ஆசிரியர்கள், செய்முறைத்தேர்வுகுழு அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.