பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கு ஜனவரி 25-இல் மாதிரித் தேர்வு

 பிளஸ் 2 வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் பாடத்தில் மாதிரித் தேர்வு சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) நடத்தப்பட உள்ளது.

       பிரசித்தி அகாதெமி சார்பில் மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்யும் நோக்கத்தில் இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வும், பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வினாத்தாள் தொடர்பாக ஆசிரியர்களுடன் விவாதமும் நடைபெறும். இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசும், கணிதம், வணிகவியல் பாடங்களில் மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும்.

சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, சென்னை அண்ணாநகர் 6-வது பிரதான சாலையில் உள்ள உள்ள ஸ்ரீகிருஷ்ணசுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வு பிளஸ் 2 தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும் என பிரசித்தி அகாதெமி தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்வுக்காக முன்பதிவு செய்ய 9500105555, 9381896074 ஆகிய செல்லிடைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இமெயில் முகவரி: prasiddhichennai@gmail.com.