10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு

திருச்சியில் நடக்கும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 10,12-ம் வகுப்பு படித்த இளைஞர்கள் சேரலாம். இதற்கான முகாம் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது.
ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்
திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் ராணுவ ஆட்சே
ர்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் விருதுநகர் மாவட் டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். சிப்பாய் டெக்னிக்கல் மற்றும் நர்சிங் உதவியாளர் பிரிவுக்கு 18-ந் தேதியும், சிப்பாய் (பொதுப் பணி) பிரிவுக்கு 19-ந்தேதியும், சிப்பாய் பொதுப்பணி டிரேட்ஸ்மேன் பிரிவுக்கு 21-ந் தேதியும், சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு 22-ந்தேதியும் ஆட் கள் தேர்வு செய்யும் பணி நடக் கிறது.
18-ந்தேதி
ராணுவ ஆட்சேர்ப்பு முகா மில் கலந்து கொள்ளும் இளை ஞர்கள் 18-ந்தேதி காலை 5 மணிக்கு வர வேண்டும். சிப் பாய் பொதுப்பணிக்கு 18.1.1994 முதல் 18.7.1997-க்குள் பிறந்து இருக்க வேண்டும். ஏனைய பிரிவுகளுக்கு 18.1.1992 முதல் 18.7.1997-க்குள் பிறந்து இருக்க வேண்டும்.
10, 12-ம் வகுப்பு தேறியவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் விவரம் அறிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுக லாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ராஜாராமன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள் ளார்.