டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 37

பொதுத் தமிழ்
1129. அரண்மனையைச் சேர்ந்த நாடக அரங்கினை எவ்வாறு அழைக்கலாம்?
1130. மண்டல புருடர் இயற்றிய ஸ்ரீபுராணம் என்பது
1131. சங்கரதாஸ் சுவாமிகள் எம்மாவட்டத்தைச் சார்ந்தவர்?
1132. அத்துவானம் என்பது

1133. வாக்கியத்தில் ஒரு எழுவாய் ஒரு பயனிலை பெற்று வந்தால் அது
1134. பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன்
1135. மறக்குடி மகளிரின் மறப்பண்பைப் பாராட்டுவதென்பது
1136. தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் யார்?
1137. அகப்பொருள் விளக்கம் நூலை இயற்றியவர் யார்?
1138. மெய்ப்பாடுகளின் வரிசையில் நான்காவது இடம் பெறுவது
1139. வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம்?
1140. திருமணத்துக்கு முந்தைய காதல் வாழ்க்கை
1141. உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தில் எந்த இயல் விளக்குகிறது?
1142. ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை
1143. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?
1144. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் குமரி என்றழைக்கப்படும் மூலிகை எது?
1145. மருந்துப் பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள்
1146. தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்ட போராட்டம்
1147. ஆதரவற்றவர்களுக்காக அவ்வை இல்லத்தை ஆரம்பித்தவர் யார்?
1148. யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது?
1149. எகிப்து நாட்டுடன் நடந்த வாணிபத்தில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்
1150. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர்
1151. அறிவியல் தொழில்நுட்பங்களை தனது சிறுகதையில் புகுத்தியவர்
1152. தன் கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார்?
1153. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
1154. வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
1155. சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்?
1156. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
1157. நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது?
1158. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்?
1159. கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது?
1160. ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர்?
1161. சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார்?
1162. ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது?
1163. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது?
1164. பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல்
1165. பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்?
1166. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார்?
விடைகள்
1129. நாயகப்பத்தி 1130. மணிப்பிரவாள நடை 1131. திருநெல்வேலி 1132. ஆள் இல்லாத பகுதி 1133. தனிவாக்கியம் 1134. கரிகாலன் 1135. மூதில் முல்லை 1136. பனம்பாரனர் 1137. நாற்கவிராசநம்பி 1138. மருட்கை 1139. குறுந்தொகை 1140. களவியல் 1141. பொருளியல் 1142. அகவற்பா 1143. சேக்கிழார் 1144. சோற்றுக்கற்றாழை 1145. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 1146. தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர் அறப்போராட்டம் 1147. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1148. அகநானூறு 1149. மயில்தோகை மற்றும் அகில் 1150. பேரறிஞர் அண்ணா 1151. சுஜாதா 1152. ஜி.யு.போப் 1153. ஜி.யு.போப் 1154. இத்தாலி 1155. வ.வே.சு. ஐயர் 1156. பம்மல் சம்பந்த முதலியார் 1157. கோண் 1158. இராமாமிர்தம் அம்மையார் 1159. தொல்காப்பியம் 1160. புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள் 1161. பம்மல் சம்பந்த முதலியார் 1162. வடலூர் 1163. அபிமன்யு சுந்தரி 1164. திருவாசகம் 1165. சுதேசமித்ரன் 1166. நாமக்கல் கவிஞர்
திருத்தம்: (நவ. 30-ம் தேதி வெளியான (வினா எண்: 1018) ‘இனியவை நாற்பது நூலின் ஆசிரியர்’ என்ற கேள்விக்கான பதில் பூதஞ்சேந்தனார் என்று இருந்திருக்க வேண்டும்.)