டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 36


பொதுத் தமிழ்
1094. ‘மோ’ என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன?
1095. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
1096. பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது?

1097. ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று பாராட்டப்படுபவர் யார்?
1098. அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள்
1099. ‘ஆற்றுணா’ என்பது
1100. ‘செலவாங்குவித்தல்’ என்றால் என்ன?
1101. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்ற புலவர் யார்?
1102. இஸ்லாம் இலக்கியத்தில் பெரிய நூலை இயற்றியவர் யார்?
1103. நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது?
1104. கவிமணி தேசிய விநாயகத்தின் முதல் படைப்பு எது?
1105. கூத்தராற்றுப்படை எனப்படுவது?
1106. ‘ஆளுடைய பிள்ளை’ என அழைக்கப்படுபவர்?
1107. சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது?
1108. கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார்?
1109. நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார்?
1110. “குழந்தைகளுக்கு விளக்கினைப் போன்றது” என்று நான்மணிக்கடிகையால் கூறப்படுவது?
1111. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் பற்றி பாடுவது?
1112. கற்க கசடறக் கற்பவை கற்றபின் இதில் அமைந்துள்ள மோனை?
1113. அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல்
1114. பிரித்தெழுதுக: “தீந்தேன்”
1115. வேர்சொல்லை அறிந்து எழுதுக: “கண்டேன்”
1116. தமிழர் பண்பாட்டின் நாகரிகத் தொட்டில் எது?
1117. முயற்சி திருவினையாக்கும் எவ்வகை வாக்கியம்?
1118. “தமிழ்த்தென்றல்” என்றழைக்கப்படுபவர் யார்?
1119. வெற்றி தரும் இறைவியின் அருளுடைமையைப் பாராட்டுதல் என்பது
1120. கூறு என்பதன் தொழிற்பெயர் வடிவம்
1121. “சுலோசனா சதி” என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்?
1122. இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் எது?
1123. தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள்
1124. பாலைத் திணைக்குரிய உரிப்பொருள்
1125. தலைவியின் நல்லியல்பைத் தலைவனிடம் பாங்கன் கூறுவதை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார்?
1126. செய்யுளில் சொற்கள் முறைபிறழாமல் வரிசையாக அமைந்து வருவது
1127. செய்யுளில் இயல்பான ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது?
1128. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
விடைகள்
1094. முகர்தல் 1095. திருத்தக்கதேவர் 1096. பிள்ளைத் தமிழ் 1097. சேக்கிழார் 1098. பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் 1099. வழிநடை உணவு 1100. பொருள்வயின் பிரிவைத் தடுப்பது 1101. கபிலர் 1102. உமறுப்புலவர் 1103. மூன்றாம் நந்திவர்மன் 1104. அழகம்மை ஆசிரிய விருத்தம் 1105. மலைப்படுகடாம் 1106. திருஞானசம்பந்தர் 1107. பரிபாடல் 1108. குகன் 1109. ஆண்டாள் 1110. கல்வி 1111. பரணி 1112. முற்றுமோனை 1113. அகநானூறு (அல்லது) நெடுந்தொகை 1114. தீம்+தேன் 1115. காண் 1116. ஆதிச்சநல்லூர் 1117. செய்தி வாக்கியம் 1118. திரு.வி.க. 1119. கொள்ளவை நிலை 1120. கூறல் 1121. சங்கரதாஸ் சுவாமிகள் 1122. கபாடபுரம் 1123. அகநானூறு, ஐங்குறுநூறு 1124. பிரிதல் 1125. செவ்வி சப்பல் 1126. நிரல் நிறைப் பொருள்கோள் 1127. உயர்வு நவிற்சி அணி 1128. பூரிக்கோ