
சார்
(SAR)
Specific Absorption Rate எனப்படும் மேற்கண்ட அளவானது மனித உடலால் (உடலின் பாகங்களால்)
உட்கிரகிக்கப்படும் கதிரியக்கத்தின் அளவினைக் குறிக்கும். செல்போன்கள் நம் கண்களுக்கு
புலப்படாத ரேடியா அலைகளால் நம் பேச்சு மற்றும் தகவல்களை பெறுகிறது என முன்னரே பார்த்தோம்.
இவ்வாறு அவை ரேடியோ கதிர்களை அனுப்பியும் பெற்றும் வரும் போது போனின் உள்ளே மட்டுமின்றி
போனின் அருகாமையிலும் கதிரியக்கத்தின் (ரேடியேஷன்) வெளிப்பாடு இருக்கும். செல்போன்
என்பது நம் மூன்றாவது கையாகிவிட்ட இக்காலங்களில் அவற்றின் அருகாமை கதிரியக்கத்தின்
தாக்கம் தொடர்ந்து நம் உடலில் பாய்ந்து கொண்டிருக்கும். இதனால் புற்றுநோய் எனப்படும்
கேன்சர் உருவாக்க வாய்ப்புகள் மிக அதிகம்.
ஆனால் மேற்கண்ட கதிரியக்கமே வெளியாகமல் போன்களை
இயக்க முடியாது. எனவே வாகனை புகைப் பரிசோதனை அளவைப் போன்று நம் அரசாங்கள் குறிப்பிட்ட
எல்லைகளை அமைத்துள்ளன. போனில் பயன்படுத்தப்படும் கதிரியக்க டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும்
ரிசீவர்களின் தரத்தின் அடிப்படையில் இம்மதிப்பானது அமையும். விலையு உயர்ந்த டிரான்ஸ-ரிசீவர்கள்
குறைந்த கதரியக்கத்துடன் அதிக துல்லயத்தை தரும். விலை குறைந்தவை மிக அதிக கதிரியக்கதை்தை
வெளியிடும்.
நம் இந்திய அரசானது 2012ஆண்டிற்கு பிறது தயாரிக்கப்படும்
போன்களில் அதிகபட்ச எல்லையை பரசோதித்த பின்னரே போன்கள் சந்தைப்படுத்தப்படும். செல்போன்
ஜாம்பவான்களான நோக்கிய மற்றும் சேம்சங் நிறுவனங்கள் பாதுகாப்பு எல்லைக்குள் தங்கள்
போன்களின் சார் அளவுகளை வைத்துள்ளன. செல்போன்களை முதல் முதலில் கண்டறிந்த மோட்டோரோலா
நிறுவன போன்களின் சார் மதிப்புகளே இன்றும் முதல் பத்து இடங்களில் அமைகின்றன.
ஒத்த விலையுடைய போன்களை ஒப்பிடும் போது மோட்டோ-ஈ
போனின் சார் மதிப்பானது தலைப்பகுதியில் 1.5W/k.g என்றும் உடல் பகுதியில் 1.36W/k.g என்றும் அளவிடப்பட்டுள்ளன. சேம்சங் நிறுவனத்தின் எஸ் டியோஸ் 2 போனானது தலை
பகுதியில் 1.02W/k.g என்ற அளவிலும், நோக்கியா லூமியா 520 ஆனது தலையில்
1.09W/k.g என்ற அளவிலும், உடலில் 0.97W/k.g என்ற அளவிலும்
கதிரியக்கத்தை வெளிவிடுகிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்திய வெளியீடான மைக்ரோமேக்ஸ்
யுனைட் 2 ஆனது தலையில் 0.45W/k.g மற்றும் உடலில் 0.85W/k.g என்ற மிகக் குறைந்த அளவுகளில் கதிரியக்கத்தை வெளியிடுகிறது.
மேற்கண்ட மதிப்புகளானது இரண்டு நிலைகளில் அளிவிடப்படும்.
இதில் at Head மதிப்பானது போனானது காதில் வைத்து பேசப்படும் போது வெளியிடும்
கதிரியக்கத்தின் அளவாகும். at Body மதிப்பானது ஸ்டாண்ட் பை எனப்படும்,
பயன்படுத்தப்படாமல் இருக்கும் அமைதி நிலையை குறிக்கும். (இந்நிலையிலும் போன் தொடர்ந்து
கதிரியக்கத்தை அனுப்பிக் கொண்டும், பெற்றுக் கொண்டும் இருந்தால்தான், உங்கள் நண்பர்
உங்கள் எண்ணை டயல் செய்யும்போது உங்கள் போன் ரிங்காகும்).
இதில் W/k.g என்பது ஒரு
கிலோ எடை கொண்ட உடற்பகுதியில் உள்ளே செல்லும் கதிரியக்கத்தின் (மின்னாற்றலின்) அளவாகும்.
இது வாட்ஸ் என்ற அளவில் அளக்கப்படும். நம் நாடானது அதிகபட்சமாக 1.6W/k.g அளவு கதிரியக்க எல்லை கொண்ட போன்களை மட்டுமே அனுமதிக்கும். குறைந்தபட்சம்
எவ்வளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம்.