ஒரே நாளில் இரண்டு போட்டித் தேர்வுகள்

தமிழக அரசு சார்பில் குரூப் 4 தேர்வு டிச., 21ம் தேதி நடக்கிறது. இதற்காக 10 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர். இதே நாளில் ரயில்வே துறை சார்பில் பொறியாளருக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
           குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தான் கல்வித்தகுதி என்றாலும் இத்தேர்வை எழுத பொறியியல் பட்டம் முடித்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: குரூப் 4 தேர்விற்கு முதுகலை பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரே நாளில் இரு தேர்வுகளை எழுத இயலாது. எனவே ஒரு தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றனர்.