சமஸ்கிருதம் படிப்பதில் என்ன தவறு? சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கேள்வி

புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், மத்திய அரசு பள்ளிகளிலும், மூன் றாவது மொழிப் பாடமாக ஜெர்மானிய மொழிக்கு பதில், சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும்' என, பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, சமீபத்தில் தெரிவித்தது.

இதை எதிர்த்து, மாணவர்களின் பெற்றோர் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது,நடப்பு கல்வியாண்டில் ஜெர்மானிய
மொழியை மூன்றா வது பாடமாக தொடருவது குறித்து, பரிசீலிக்க வேண்டும். சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக்காமல், கூடுதல் பாடமாக வைத்திருக்கலாம்' என, தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், 'மாணவர்களின் சிரமம் கருதி, இந்தாண்டு சமஸ்கிருத தேர்வு எதுவும் மத்திய அரசு தரப்பில் நடத்தப்படாது' என, உறுதி அளிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஏ.ஆர். தாவே, ''குழந்தை கள் கூடுதல் மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை கற்பதில் எந்த தவறும் இல்லை. ஒரு தந்தையாக, அரசின் இந்த முடிவை நான் ஏற்கிறேன். குழந்தை கள் சமஸ்கிருதத்தை கூடுதலாக படிப்பதில் என்ன தவறு உள்ளது?'' என்றார்.இந்த வழக்கின் விசாரணை, நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.