விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு - DINAKARAN

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு தேர்வு நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கத்தினர் சிஇஓ செந்திவேல்முருகனிடம் மனு அளித்தனர்.
ஆசிரியர் உரிமை இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் சேதுசெல்வம், கணேசன், எட்வின், லூயிஸ், இளங்கோ, சங்கர், பழனியப்பன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், சிவகங்கை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் நடக்க உள்ள சிறப்பு தேர்வை பள்ளி வேலை நாட்களில் நடத்த வேண்டும்.
10ம் வகுப்பு, பிளஸ்டூ வகுப்பில் மெல்ல கற்றும் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேட்டை மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் விரைந்து வழங்க வேண்டும். அரையாண்டு தேர்வு முடிவுகளை ஆய்வு செய்யும் போது அனைத்து ஆசிரியர்களையும் வரவழைத்து அனைவரின் முன்னிலையிலும் ஒரு ஆசிரியரை விசாரணை செய்யும் முறையை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.