ஆசிரியரை தாக்கிய வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கேட்டு மனு விசாரணை தள்ளிவைப்பு


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பாஸ்கர் என்பவரை தாக்கியதாக 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அருளானந்தம் உட்பட பலரை கோடம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில், அருளானந்தம், சகாரியா சைமன், தினேஷ், மின்னல்குமார், அசோக்குமார், செந்தில்குமார், பி.குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.மாலதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனுக்களுக்கு பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு, மனுக்கள் மீதான விசாரணை 5–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.