தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள பள்ளிகளுக்கு வழிமுறைகள் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியது

புதுடெல்லி பள்ளிகளில் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை களை அனைத்து மாநில அரசு களுக்கும் மத்திய அரசு அனுப்பி யுள்ளது. 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் வழக்கில் அமெரிக்கா வில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹெட்லியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவில் 2 முக்கிய பள்ளிகளை வீடியோ படம் எடுத்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பள்ளிகளில் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர் கொள்வது தொடர்பாக 2010-ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் வழி காட்டு நெறிமுறைகள் அனுப்பப் பட்டன. தற்போது பாகிஸ்தானின் பெஷாவர் நகர் பள்ளியில் நடத் தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மாணவர்கள் உட்பட 148 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே 2010-ம் வெளியிடப் பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது மீண்டும் அனுப்பி யுள்ளது. 5 பக்கங்கள் கொண்ட அந்த வழிகாட்டு நெறிமுறைகளில், தீவிரவாத அச்சுறுத்தல்களை பள்ளி நிர்வாகங்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் வலுவான, உயர மான கான்கிரீட் சுவர்கள் கட்டப் பட்டிருக்க வேண்டும். வாயில் முதல் பள்ளி வளாகம் முழுவதும் தொலைபேசி வசதி இருக்க வேண்டும். பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். வாயில் காவலர்களுக்கு வாக்கிடாக்கி அளித்து அதன்மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். தீவிரவாதிகள் பள்ளிக்குள் புகுந்தால் வகுப்பறையை பூட்டி விட்டு அனைத்து மாணவர்களும் தரையோடு தரையாக படுத்துக் கொள்ள வேண்டும். கதவை உடனடியாக திறப்பதோ, வெட்ட வெளிக்கு ஓடுவதோ கூடாது, தீவிரவாதிகளின் இருப்பிடத்தை கண்காணித்து மறைவிடங்கள் வழியாக பள்ளி வாசலை சென்றடையலாம். இதுபோன்ற ஆபத்தான நேரங் களில் ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்பட்டு மாணவர்களை வழி நடத்த வேண்டும். ஒருவேளை என்ன செய்வதென்று ஆசிரியர் களுக்கு குழப்பம் ஏற்பட்டால் போலீஸார் வரும்வரை காத் திருப்பது நல்லது. பள்ளியில் குண்டுகள் வைக்கப் பட்டிருப்பது தெரியவந்தால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். காலையில் பள்ளி தொடங்கிய வுடன் அனைத்து வாயில்களிலும் காவலர்களை நிறுத்த வேண்டும். சந்தேகத்துக்குரிய நபர் பள்ளிக் குள் நுழைய முயன்றால் உடனடியாக எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்ய வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளில் பள்ளிக்கு அருகே பெற்றோர் ஓரிடத்தில்கூடுவதற்கு பள்ளி நிர்வாகம் முன்கூட்டியே இடத்தை தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும். பெற்றோருக்கு எஸ்.எம்எஸ். மூலம் தகவல்களை தெரிவிக்க வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக பள்ளி வளாகத்தில் அடிக்கடி ஒத்திகைகளை நடத்துவது மிகவும் அவசியம். -பிடிஐ பள்ளி தலைமையாசிரியர் கள் வழிகாட்டு நெறிமுறை களை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டி தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.