
வலியுறுத்தி, வருகிற ஜனவரி(2015) 7-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 4 நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
அதன் பிறகும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். இதில், இந்தியா முழுவதும் உள்ள 85 ஆயிரம் வங்கி கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.
மேற்கண்ட தகவல்கள் இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.