68 பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை: கல்வியாளர்கள் அதிருப்தி

பத்துக்கும் குறைவான மாணவர்கள்
சேர்க்கை கொண்ட, 68
பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு கல்வியாளர்கள்

அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், 36 ஆயிரத்து 505
அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில், மாணவர்கள்
சேர்க்கையை அதிகரிக்க, 14 வகையான
நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி
வருகிறது. மேலும், இடைநிற்றல்
தவிர்க்க கல்வி உதவித்தொகை, ஆங்கில
வழிக்கல்வி, தொழில்நுட்ப வகுப்பு என
பல
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இருப்பினும், மாணவர்கள் சேர்க்கையில்
பெரிதாக மாற்றம் ஏற்படுத்தவில்லை.
பெரும்பாலான அரசு பள்ளிகளில்,
மாணவர்கள்
எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.
இதன் காரணமாகவே,
ஒவ்வொரு ஆண்டும்
உபரி ஆசிரியர்களின் பட்டியல்
அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும்,
மாணவர்களின் எண்ணிக்கை பத்துக்கும்
குறைவாக உள்ள பள்ளிகளின் விபரங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில்,
தொடக்ககல்வி அலுவலகத்தின்
கட்டுப்பாட்டில், 1,121 பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன. இதில், 68
பள்ளிகளில் பத்துக்கும் குறைவான
மாணவர்கள்
மட்டுமே படித்து வருகின்றனர்.
இப்பள்ளிகளை மூட
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்வியாளர் பிரின்ஸ்
கஜேந்திரபாபு கூறுகையில்,
"அரசு பள்ளிகளை மாணவர்கள்
சேர்க்கை குறைவுக்கு காரணம்,
பள்ளிக் கல்வித்துறையே.
பல்வேறு காரணங்கள்
கூறி அரசு பள்ளிகளை மூடுதல்,
ஒருங்கிணைத்தல் ஏற்புடையதல்ல.
மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க
ஆக்கப்பூர்வமான
செயல்பாடுகளை மேற்கொள்ள
வேண்டுமே தவிர, பள்ளிகளை மூட
அனுமதிக்கக்கூடாது.
இந்நிலை தொடரும் பட்சத்தில், வரும்
காலங்களில் அரசு பள்ளிகளே இல்லாத
நிலை ஏற்படும்" என்றார்.
இதுகுறித்து கோவை மாவட்ட தொடக்க
கல்வி அலுவலரை பலமுறை
அணுகியும் தகவல் தெரிவிக்க
மறுத்து விட்டார்.