டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 25

இந்திய அரசியலமைப்பு
711. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவானது எதற்குப் பிறகு சட்டமாகிறது?
712. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறைந்தபட்சம் எத்தனை வயது இருக்க வேண்டும்?

713. பாராளுமன்ற இரு அவைகளுக்கு இடையே எழும் முரண்பாடு எதன்மூலம் தீர்க்கப்படும்?
714. உயர்நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்?
715. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது என்ன?
716. மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் எத்தனை மாதங்களில் உறுப்பினராக வேண்டும்?
717. வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
718. ஓர் அரசியல் கட்சி, தேசிய கட்சியாக எப்போது அங்கீகரிக்கப்படும்?
719. அரசு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) எதிரொலிக்கும் சமதர்ம கொள்கையின் நோக்கம் எதைக் காட்டுகிறது?
720. இந்திய அரசியலமைப்பின்படி ராஜ்ய சபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படும்?
721. 92-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
722. எந்த சட்டங்களுக்கு எதிராக நீதிப்பேராணை (Writ) வரம்பு வழங்கப்படுவதில்லை?
723. இந்திய அரசியலமைப்பு பற்றிய இடைவிளக்கங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் எந்த தலைப்பின்கீழ் இடம்பெறுகின்றன?
724. மத்திய அரசு ஊழியர் ஒருவர் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை எதிர்த்து எங்கு முறையிடலாம்?
725. இந்திய சுதந்திரச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
726. எந்த சட்டத்தின்படி இந்திய பிரிவினை செய்யப்பட்டது?
727. இந்திய அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை?
728. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
729. தேசிய தலைநகர் ஆட்சிப்பகுதியாக டெல்லி எந்த சட்டத்திருத்தம் மூலம் அறிவிக்கப்பட்டது?
730. இந்திய மாநிலங்கள் எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?
731. இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு எந்த வகையான குடியுரிமையை வழங்கியுள்ளது?
732. குடியுரிமைகளைப் பெறும் தகுதிகளைக் குறிக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
733. அரசியலமைப்பின் 12-வது விதி முதல் 35-வது விதி வரை குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எத்தனை?
734. நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை என்ன?
735. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் எத்தனை?
736. ஜார்கண்ட், சதீஸ்கர், உத்தராஞ்சல் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது எந்த சட்டத்திருத்தம்?
737. இந்திய அரசியலமைப்பில் எந்த விதியில் மைய நிர்வாகம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன?
738. மலை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் எது?
739. லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
740. 6 முதல் 14 வயது வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் எது?
741. ராஜ்ய சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
742. குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபாவுக்கு எத்தனை உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?
743. ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
744. ராஜ்ய சபா உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வுபெறுகிறார்கள்?
745. பாராளுமன்றத்தில் நிதி மசோதா முதலில் எங்கு தாக்கல் செய்யப்படும்?
விடைகள்
711. குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததும் 712. 35 713. லோக்சபா சபாநாயகரின் நடவடிக்கை மூலம் 714. குடியரசுத்தலைவருக்கு 715. 65 716. 6 மாதங்கள் 717. 61-வது சட்டத்திருத்தம் 718. 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால் 719. நாட்டின் பொருளாதார வளம் ஒரு சாராரிடம் மட்டுமே குவிவதை தடுத்து சமமான பகிர்வை உறுதி செய்வது 720. ராஜ்ய சபாவை கலைக்க இயலாது. 721. போடோ, டோக்ரி, மைதிலி, சாந்தலி ஆகிய 4 மொழிகள் அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட விவரத்தை சட்டமாக்கியுள்ளது. 722. MISA, NSA 723. மேல்முறையீட்டு நீதி வரம்பு (Appellate Jurisdiction) 724. உச்சநீதிமன்றம் 725. ஜூன் 1947 726. இந்திய சுதந்திரச் சட்டம் 1947 727. 299 728. நவம்பர் 26, 1949 729. 69-வது சட்டத்திருத்தம் 730. மக்கள் பேசும் மொழி அடிப்படையில் 731. ஒற்றைக்குடியுரிமை 732. 1955-ம் ஆண்டு சட்டம் 733. 6 734. அடிப்படை உரிமைகள் 735. 11 736. 84-வது சட்டத்திருத்தம் 737. விதி 52-151 738. 77-வது சட்டத்திருத்தம் 739. 545 740. 86-வது சட்டத்திருத்தம் 741. 250 742. 12 743. 6 ஆண்டுகள் 744. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 745. லோக் சபா