டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 23

வரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்
656. லண்டனில் இந்திய சுயாட்சி சங்கத்தை (Society of Indian Home Rule) தோற்றுவித்தவர் யார் ?
657. “இந்திய முசல்மான்கள்” என்ற நூலை எழுதியவர் யார்?
658. “யுகாந்தர்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார்?

659. பைசாகி தினம் எந்த மதத்தினரால் புனித தினமாக கொண்டாடப்படுகிறது?
660. லக்னோ உடன்படிக்கையின் முக்கியத்துவம் என்ன?
661. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிலாபத் தினம் என்று கொண்டாடப்பட்டது?
662. காந்திஜி ஒத்துழையாமை போராட்டத்தை எப்போது ஆரம்பித்தார்?
663. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இரட்டை ஆட்சி முறையை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு எது?
664. லாகூர் காங்கிரஸ் தீர்மானத்தின்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நாள் எது?
665. காந்திஜி உப்பு சத்தியாkdகிரகத்தின் போது கைதுசெய்யப்பட்டு எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?
666. 1935 இந்திய அரசாங்க சட்டம் வருவதற்கு முன்னோடியாக இருந்தது எது?
667. இந்திய சுதந்திர லீக் என்ற அமைப்பை தொடங்கியவர்கள் யார்?
668. இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தவர் யார்?
669. இந்திய விடுதலைச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
670. சுயராஜ்ஜிய தினம் எப்போது கொண்டாடப்பட்டது?
671. வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான தீர்மானம் எங்கு எப்போது நிறைவேற்றப்பட்டது?
672. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடந்தது?
673. காந்திஜி தண்டி யாத்திரையை எப்போது மேற்கொண்டார் ?
674. வேதாரண்யத்தில் உப்பு யாத்திரைக்கு தலைமை தாங்கியவர் யார் ?
675. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது?
விடைகள்
656. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா
657. வில்லியம் ஹண்டர்
658. விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா
659. சீக்கியர்கள்
660. முஸ்லீம் லீக், காங்கிரசுடன் சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டது
661. 17.10.1919
662. 1922 பிப்ரவரி 12 சவுரி சவுரா நிகழ்ச்சிக்குப் பின்பு
663. முடிமன் குழு
664. 26.1.1930
665. புனேயில் உள்ள எரவாடா சிறை
666. 1933 மார்ச் மாதம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெள்ளை அறிக்கை
667. நேரு மற்றும் போஸ் (1928-ல்)
668. வின்லித்கோ பிரபு
669. 1947 ஜூலை 18,
670. 1932 ஜனவரி 26
671. 1942 ஆகஸ்ட் 7, 8-ம் தேதியில் பம்பாய் நகரில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில்.
672. பம்பாய்
673. 1930 மார்ச்
674. ராஜாஜி
675. அமிர்தசரஸ்
(கடந்த 18-ம் தேதி அன்று வெளியான “இந்தியாவில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது? (வினா எண் 586) என்ற கேள்விக்குப் பதில் 1986 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1956 என்பதுதான் சரி.)
புவியியல் பாடத்தை எப்படி படிக்க வேண்டும்?
புவியியல் பாடத்திலும் கணிசமான எண்ணிக்கையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. புவியியலை பொருத்தமட்டில், இந்தியாவில் உள்ள அனைத்து விலங்குகளின் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், காடுகள், முக்கிய நதிகள், ஆறுகளின் பிறப்பிடம், கடலில் கலக்குமிடம், மண்வகைகள், அங்கு விளையும் பயிர்வகைகள், போக்குவரத்து வசதிகள் (நெடுஞ்சாலை, ரயில்வே, விமானவழி, நீர்வழி), துறைமுகங்கள் (இயற்கை துறைமுகம், செயற்கை துறைமுகம் என பிரித்துப் படிக்க வேண்டும்), குன்றுகள், மலைகளின் வரிசைப்படியான அமைப்புகள், சுற்றுலாத்தலங்கள், பருவமழை பொழியும் இடங்கள், மக்கள்தொகை விவரம் என பட்டியலிட வேண்டும். இந்தியா, தமிழ்நாடு, மாவட்ட வாரியாக வரைபடங்களை வீட்டின் சுவரில் மாட்டி தினமும் பார்த்து பயிற்சி பெற வேண்டும்.
மேற்சொன்ன விவரங்களில் தமிழ்நாட்டுக்கு மட்டும் குறிப்பாக படித்து குறிப்பெடுத்துக்கொள்வது முக்கியம். தமிழ்நாட்டில் கரும்பு, நெல், பருத்தி, பயறு வகைகள் எங்கெங்கு விளைகின்றன? எங்கெங்கு விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன? இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள் பற்றிய விவரம், அவற்றைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள், தானே புயல், ஜல்புயல் ஹூத் ஹூத் புயல் போன்ற புயல்கள் எப்போதெல்லாம் ஏற்பட்டன? அவற்றுக்கு எவ்வாறு எந்தெந்த நாடுகள் பெயர் சூட்டுகின்றன? என்பது முதற்கொண்டு தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்தியாவில் உள்ள 7 யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து, மிசோராம், மணிப்பூர், திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றின் பூகோளநிலை, ஆட்சிமுறை, மக்களின் வாழ்க்கை, பண்பாடு, மொழி, கலை போன்றவை குறித்து விளக்கமாக தெரிந்துகொண்டு குறிப்பெடுத்துப் படித்தால் புவியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெறலாம்.