டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 21

பொது அறிவு-நடப்புக்கால நிகழ்வுகள்
616. செல்போனை கண்டுபிடித்தவர் யார்?
617. "The Darker Side of the Black Money" என்ற நூலை எழுதியவர் யார்?
618. FM என்றால் என்ன?

619. ரேடியோ அலைகள் ஒரு விநாடியில் எவ்வளவு தூரம் பயணம் செய்யும்?
620. இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?
621. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை எவ்வளவு?
622. SMS என்பதன் விரிவாக்கம் என்ன?
623. பீடி தொழிலாளர்களின் குடும்பத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன?
624. வெண்மை புரட்சி எதனுடன் தொடர்புடையது?
625. மஞ்சள் புரட்சி தொடர்புடையது எது?
626. நபார்டு (NABARD) வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
627. அரிசி அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம் எது?
628. மாநில அரசுக்கு எந்த வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது?
629. ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்?
630. இந்தியாவின் தேசிய மலர் எது?
631. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
632. முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?
633. அக்குபஞ்சர் என்பது என்ன?
634. அணு உலையில் பயன்படும் நீர் எது?
635. மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?
விடைகள்
616. மார்டின் கூப்பர்
617. ஓய்வுபெற்ற இந்திய வருவாய் பணி அதிகாரி பி.வி.குமார்
618. Frequency Modulation
619. சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்
620. கிரண்பேடி
621. 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958
622. Short Message Service
623. ராஷ்ரிய சுவாஸ்திய பீமாயோசனா
624. பால் மற்றும் முட்டை
625. எண்ணெய் வித்துக்கள்
626. 1982-ல்
627. மேற்கு வங்காளம்
628. விற்பனை வரி
629. 30 ஆண்டுகள்
630. தாமரை
631. பிஹார்
632. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
633. சீனர்களின் ஊசி மருத்துவமுறை
634. கனநீர்
635. 206
வரலாற்று பாடங்களை படிப்பது எப்படி?
 குரூப்-4 தேர்வில் இந்திய வரலாறு, தமிழக வரலாறு, பண்பாடு, இந்திய தேசிய இயக்கம் மற்றும் புவியியல் ஆகிய பிரிவுகளில் இருந்து குறைந்தது 10 முதல் 15 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன. முந்தைய வினாத்தாள்களை ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரிய வரும். இவை எல்லாமே 10-ம் வகுப்பு வரையுள்ள இந்திய வரலாறு, தமிழக வரலாறு போன்றவற்றைத்தான் ஆதாரமாக கொண்டுள்ளன.
 இந்த கேள்விகளை எதிர்கொள்ள இந்திய வரலாறு என்பதை பழங்கால இந்தியா, மத்திய இந்தியா, நவீன இந்தியா என 3 பகுதிகளாகப் பிரித்து அதன் வரலாற்றுச் சம்பவங்களை தொடர் வரிசையாகப் படிக்க வேண்டும்.
 பழங்கால இந்தியா பகுதியில், கற்காலம், சிந்து சமவெளி நாகரீகம், புத்த மதம், சமணம் போன்ற மதங்களின் வரலாறு, அவை ஏற்படுத்திய மாற்றங்கள், தொடர்ந்து ஆட்சிபுரிந்த மவுரியப் பேரரசு, அசோகர், கனிஷ்கர், குப்தர்கள், வர்த்தன வம்சத்தினர், சாளுக்கியர்கள், அவர்களின் ஆட்சிமுறைகள், மன்னர்களின் முழுவிவரம், சாதனைகள் மற்றும் சீர்திருத்தங்களை குறிப்பெடுக்க வேண்டும்.
 மத்திய இந்தியா பகுதியில் இந்தியாவை முதன்முதலாக ஆண்ட டெல்லி சுல்தான்கள், தொடர்ந்துவந்த கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், லோடி வம்சம் வரையிலும், பாமினி அரசு, விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசை நிறுவிய பாபர் முதல் ஹூமாயூன், ஷெர்ஷா, அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் வரையிலும், மராட்டியர்கள், சீக்கியர்கள் ஆட்சிமுறை, சீர்திருத்தங்கள் முக்கியமானவை.
 நவீன இந்தியா பகுதியில், இந்தியாவுக்கு முதன்முதலாக வருகை தந்த போர்ச்சுக்கீசியர்கள், தொடர்ந்து வந்த பிரெஞ்சு, டச்சுக்காரர்கள் மற்றும் 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி வணிகம், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகை முதல் 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் வரை நம் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை பகுதி வாரியாக பிரித்துப் படிக்க வேண்டும்.
- நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)