முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் விற்பனை தொடங்கியது


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,807 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். தேர்வுக்கான விண்ணப்பம் தமிழ்நாட்டில் அனைத்து
மாவட்டங்களிலும் நேற்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். சென்னையில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. முதுகலை பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் வந்து விண்ணப்ப படிவத்தை வரிசையில் நின்று பெற்றுச்சென்றனர். இந்தபடிவம் 26-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. அன்றுதான் பூர்த்தி செய்த படிவத்தை சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.இந்த படிவம் 2 லட்சத்து 75 ஆயிரம் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 10-ந்தேதி நடைபெறுகிறது.