இணையதளம் மூலம் சொத்து வரி செலுத்த சேவை வரி ரத்து

சென்னை மாநகராட்சிக்கு இணையதளம் மூலம் சொத்துவரி செலுத்துவோருக்கு வசூலிக்கப்பட்டு வந்த சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று நடை பெற்ற மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவித்திருப்பதாவது: இணையதளத்தை பயன்படுத்தி மாநகராட்சிக்கு கடன் அட்டைகள் மூலம் சொத்துவரி செலுத்தும்போது, பணம் பரிமாற்றம் செய்யப்படும் தொகையில் 1.75% சேவை வரியாக வங்கி நிறுவனத்தால் நேரடியாக வசூலிக்கப்படுகிறது.
இந்த சேவை வரியை வசூலிக் காமல் பரிவர்த்தனை வசதியை அளிக்க, ஐசிஐசிஐ, ஐடிபிஐ, பஞ்சாப் நேஷனல் மற்றும் இந்துஸ்தான் வங்கிகள் முன்வந்துள்ளன. எனவே, இந்த வங்கிகளின் மூலம் மாநகராட்சியின் இணைய சேவைகளை மேற்கொள்ளவும், இதுவரை இந்த சேவையை அளித்து வந்த இந்தியா ஐடியாஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.