பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்...

மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களின்
தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வுக் கூட்டத்தில், உயர்திரு பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் உயர்திரு.பூஜா குல்கர்னி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆய்வு கூட்டத்தில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்தனர்.காலாண்டுத் தேர்வில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி இலக்கை அடையவேண்டும் அதற்கான முழு முயற்சிகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. 6,7,8 ஆகிய வகுப்புகளில் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்கள் மாணவர்களுக்கு அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது