சிவகங்கை, : வரலாற்று ஆசிரியர் பதவி உயர்வுக்கு வரலாறு பாடத்தை மட்டும் ஒரே பாடமாக படித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக்கல்வி இணை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்களில் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு 1 பணியிடமும், இளங்கலையில் வரலாறு தவிர்த்து பிற பாடங்கள் படித்தும், முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு(கிராஸ் மேஜர்) 3 பணியிடமும் ஒதுக்கப்படுகிறது.
இதனால் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறை முதன்மை பாடமாக படித்த ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறு படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே எங்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிற பாடங்களுக்கு பின்பற்றுவது போல் சமூக அறிவியல் பாடத்திற்கும் ஏழு பாட வேளைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும். அறிவியல் பாடத்திற்கு உள்ளதுபோல் சமூக அறிவியல் பாடத்திற்கும் 25 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுக்கு வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள் சிறப்புத் தேர்வின் மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக(சமூக அறிவியல்) பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காலதாமதமின்றி தகுதி கான் பருவம் முடித்ததற்கான ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.