கறுப்பு, நீலம் மை பயன்படுத்த உத்தரவு

அலுவலக கோப்புகளில் குறிப்புகள், தகவல்கள் எழுதும் போது, கறுப்பு அல்லது நீல நிற மையை பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னர், இணை செயலர்கள் மற்றும் அதற்கு மேலான அதிகாரிகள் மட்டும், பச்சை நிற மையை பயன்படுத்தி கையெழுத்திட அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது போல, அரசின் பிற துறைகளுடனான தொடர்புக்கு, தந்தியை பயன்படுத்த வேண்டாம் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது. நாட்டில், 163 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த தந்தி, கடந்த ஆண்டு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.