அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை

புதுடில்லி : ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை
நடைமுறை படுத்தப்பட உள்ளதாக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அலுவலக நேரத்தில் தாமதமாக வருபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாமல், கடுமையான விதிகள் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.