
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) சார்பில் மங்கள்யான்
விண்கலம் செவ்வாய் கிரக ஆய்வுக்குஅனுப்பப்பட்டு உள்ளது. அது தனது சுற்று
பாதையில் சுற்றி வந்து செவ்வாய் கிரகம் குறித்து படம் எடுத்து பூமிக்கு
அனுப்பி வருகிறது.
விண்கலத்திற்கு பாதிப்பு
இந்நிலையில்,
வால் நட்சத்திரம் ஒன்று விண்வெளியில் வேகமாக சுற்றி வருகிறது என்றும் அது
செவ்வாய் கிரக ஆய்வில் ஈடுபட்டு வரும் விண்கலத்தின் சுற்று பாதை வழியே
கடந்த அக்டோபர் 19ந்தேதி செல்லும் வாய்ப்பு உள்ளது என்றும்
தெரிவிக்கப்பட்டது.
இந்த விண்கலத்திற்கு
விஞ்ஞானிகள் 67பி/சுரியுமோவ்-கெராசிமென்கோ என பெயரிட்டிருந்தனர். இதனால்
விண்கலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் தகவல்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
டுவிட்டர் செய்தி
வால்
நட்சத்திரம் மோத வருவதை அடுத்து மங்கள்யான் விண்கலம் பாதுகாப்பான
இடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து விண்கலம் தனது பணியை தொடர்ந்தது.
வால் நட்சத்திரம் கடந்து சென்ற பின்னர் வெளியான மார்ஸ்ஆர்பிட்டர் என்ற
பெயரிலான டுவிட்டர் செய்தியில், பியூ! வாழ்நாள் முழுமைக்கான அனுபவம்.
செவ்வாய்
கிரகத்தை கடந்து வால் நட்சத்திரம் சென்றதை கவனித்தேன். நான் எனது சுற்று
பாதையில் பாதுகாப்பாக மற்றும் பலமுடன் இருந்தேன் என தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
இஸ்ரோவின் மங்கள்யான் விண்கலத்தில்
இருந்த செவ்வாய் வண்ண கேமிரா, வால் நட்சத்திரத்தின் மிக அதிக வெளிச்சம்
நிறைந்த பகுதியின் ஒரு பக்கத்தை படம் பிடித்துள்ளது.
புகைப்படங்கள் வெளியீடு
செவ்வாய்
மற்றும் வால் நட்சத்திரம் ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் நெருங்குவதற்கு 40
நிமிடங்களுக்கு முன்பாக வால் நட்சத்திரத்தின் வெளிச்ச பகுதி கேமிரா படம்
பிடிக்கும் பகுதிக்கு அருகே வந்துள்ளது. இது குறித்த தகவலை
புகைப்படங்களுடன் இணைத்து தனது சமூக வலை தளத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
அதில்,
கடந்த அக்டோபர் 19ந்தேதி அன்று வால் நட்சத்திரத்தினுடைய அதிக வெளிச்சம்
நிறைந்த பகுதியானது மங்கள்யான் விண்கலம் அருகே 1.8 லட்சம் முதல் 1.3 லட்சம்
கி.மீட்டருக்கு இடைப்பட்ட தொலைவில் வந்துள்ளதை செவ்வாய் வண்ண கேமிரா
எடுத்துள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.
புகை வெளியீடு
ஜெட்
விமானங்கள் வாயுக்களை வெளியிடுவதை போன்று வால் நட்சத்திரத்தின் அணு கரு
மையத்தில் இருந்து புகை கீற்று வெளி வந்துள்ளது. இது புகை மற்றும் பனி
கட்டிகளை வெளியிட்டு இருந்தது.
இந்த புகை வெளியீடு வால் நட்சத்திரம் சூரியனை மிக அருகே நெருங்கும்போது அதிகரித்து வந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய விண்வெளி கழகம்
வால்
நட்சத்திரத்தில், ஐரோப்பிய விண்வெளி கழகம் (ஈ.எஸ்.ஏ.) பிளே என்ற ரோபோவை
நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஈ.எஸ்.ஏ.வின்
ரோசெட்டா மற்றும் அதன் உடன் இருந்த மற்றொரு விண்கலமான பிளே ஆகியவை ஒன்றுடன்
ஒன்று இருந்து இன்று பிரிந்து சென்றுள்ளது.
அகில்கியா
என்ற பெயரிடப்பட்டு உள்ள பகுதியில் இறங்குவதற்காக பிளே சென்று கொண்டு
இருக்கிறது என்று இஸ்ரோ தனது வலைதள செய்தியில் தெரிவித்துள்ளது.