முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு 6 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்தனர்

விருதுநகர் மாவட்டத்தில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வுக்கு இதுவரையில் 6 ஆயிரம் விண்ணப்பங்கள்  விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான போட்டி எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜன.10-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நவ-10ம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் 5500 பேருக்கு விண்ணப்பங்கள்  வழங்கப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பம் செய்வதற்கு ஒரு நாளே உள்ளதால் செவ்வாய்கிழமை காலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி முடித்தவர்கள் 500 பேருக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அதனால், அவர்கள் விண்ணப்பங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்று, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களுடன் பூர்த்தி செய்து உடனே கல்வித்துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.
எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் விரைவில் விண்ணப்பபடிவங்களை 26-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அளிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.