6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட உத்தரவு:
பிங்க்ளே விஜய் மாருதி-தொழில் துறை இணைச் செயலாளர் (சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர்-பணிகள்)
சுபோத் குமார்-பள்ளிக்கல்வித் துறை துணைச் செயலாளர் (விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் சார் ஆட்சியர்)
பிரவீண் பி.நாயர்-நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணைச் செயலாளர் (ஓசூர் சார் ஆட்சியர்)
கே.எஸ்.கந்தசாமி-சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்-பணிகள் (நில நிர்வாக இணை ஆணையாளர்)
கே.விஜயகார்த்திகேயன்-கோவை மாநகராட்சி ஆணையாளர் (கோவில்பட்டி சார் ஆட்சியர்)
சில்பா பிரபாகர் சதீஷ்-சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்-கல்வி (வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர்)