தமிழ்ப் பல்கலை. தேர்வுகள் டிச. 20-ல் தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத் தேர்வுகள் டிச. 20-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

 இதுகுறித்து பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் தேர்வுப் பிரிவு மூலம் நிகழ் நாள்காட்டி ஆண்டுக்கான முதுநிலை, இளநிலை, பட்டயம், சான்றிதழ் மற்றும் துணைத் தேர்வுகள் டிச. 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
மேலும், இளங்கல்வியியல் முதல் இரண்டாமாண்டுகளுக்கு உரிய தேர்வு டிசம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.