2 மாதங்களில் குரூப்-2 மெயின் தேர்வு முடிவு

குரூப்-2 மெயின் தேர்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர்,
சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி,
வருவாய் உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,064 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 8, 9-ம் தேதிகளில் குரூப்-2 மெயின் தேர்வு நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை 11 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவு தொடர்பாக டிஎன்பி எஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பால சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “அதிகபட்சம் 2 மாதத்துக்குள் குரூப்-2 மெயின் தேர்வு முடிவை வெளியிடுவோம்” என்றார். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படு வார்கள். அதன்பிறகு, மெயின் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும். மதிப்பெண், விருப்பம், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்களுக்குப் பணிகள் ஒதுக்கப்படும்.