அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.இதில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494 முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.

                                                 download pro 

                                        Panel Click Here...

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் இணையதளம் மூலம் நவம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494 முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே (2014-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி) நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டு ஆணை பெற வேண்டியவர்கள், அந்தந்த மாவட்ட கலந்தாய்வு மையத்துக்குச் சென்று அங்குள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பதவி உயர்வு ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.