மீன்வள சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 1 கடைசிநாள்

சென்னை: மீன்வளம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் சேர, டிசம்பர் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு மீன்வள பல்கலை தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம், தமிழ்நாடு மீன்வள பல்கலை, மீன்வளம் தொடர்பான, வேலைவாய்ப்பு சார்ந்த நான்கு சான்றிதழ் படிப்புகளை, ஜனவரி மாதம் துவக்குகிறது.
இதுதொடர்பாக பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: இறால் பண்ணை தொழில்நுட்பம்; மீன்பதன தொழில்நுட்பம் என, இரண்டு ஆறு மாத படிப்புகளும்; மீன்பிடிப்பு - மாலுமிக்கலை - படகாளுமை என்ற ஓராண்டு படிப்பும்; இறால் பண்ணையில் சிறந்த மேலாண்மை நடைமுறைகள் என்ற அஞ்சல் வழியிலான, மூன்று மாத படிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் வழியிலான இந்த படிப்புகள், ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளன. 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர், இந்த படிப்புகளில் சேரலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "இயக்குனர், மீன்வள தொழில்நுட்ப நிலையம், முதலாம் கடற்கரை சாலை, நாகப்பட்டினம் - 611 001" என்ற முகவரிக்கு, டிசம்பர் 1ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, www.tnfu.org.i என்ற இணையதளத்திலும், 04365 - 240441, 240442 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.