மருத்துவம் சார் படிப்புக்கு 121 மாணவர்கள் சேர்ப்பு

  சென்னை, ஓமந்தூரார் தோட்ட புதிய சட்டசபை வளாகத்தை, தமிழக அரசு, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றி உள்ளது. இந்த மருத்துவமனையில், மருத்துவம் சார் பயிற்சி பள்ளி ஒன்று துவங்கப்பட்டுள்ளது.  

        இதன்கீழ், மருத்துவ ஆவண பராமரிப்பு, ஆய்வக பரிசோதனை, ரேடியோ தெரபிஸ்ட் உள்ளிட்ட, நான்கு டிப்ளமோ படிப்புகள்; 12 சான்றிதழ் படிப்புகளும் துவங்கப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெற்ற, 141 பேரில், 121 பேர் சேர்ந்துள்ளனர். இதற்கான வகுப்புகள், டிச., 1ம் தேதி துவங்கப்படும்