அனிமேஷன் முறையில் பாடங்கள் தயாரிப்பு திட்டத்துக்கு ரூ .1 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

பத்தாம் வகுப்புக்கான கணக்குப்
பாடக்கூறுகள் ‘அனிமேஷன்களாக’
உருவாக்கி வகுப்பறையில் நடத்தப்பட
உள்ளது.
இது குறித்து பள்ளிக்
கல்வித்துறை செயலாளர்
சபீதா கூறியதாவது:
பத்தாம் வகுப்புக்கான பாடங்களின்
மையக் கருத்துகளை அனிமேஷனாக
உருவாக்கி வகுப்பறையில் கற்பிக்க
நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து மாநில அளவில்
மாவட்டத்துக்கு 3 ஆசிரியர்கள் வீதம் 96
பேருக்கு பயிற்சி அளிக்க
முடிவு செய்து, இந்த
பயிற்சியை தொடங்கியுள்ளோம். தகவல்
தொழில்
நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பாடப்
பொருட்களில்
முப்பரிமாண முறையில் (3டி)
மாணவர்களுக்கு எளிதில் புரியும்
வகையில் சிடிக்கள் தயார்
செய்யப்பட்டுள்ளன.
இதை எப்படி மாணவர்களுக்கு
புரியவைப்பது என்பது பற்றி மேற்கண்ட
ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது. மேற்கண்ட 96
ஆசிரியர்கள் பயிற்சி பெற்றபின்
அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பாட
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்
.
தற்போது கணக்கு பாடத்தின்
மையக்கருத்தை அனிமேஷனாக
தயாரித்துள்ளனர். மற்ற
பாடங்களுக்கு படிப்படியாக அனிமேஷன்
சிடிக்கள் தயாரிக்கப்பட உள்ளது. இந்த
திட்டத் துக்கு ரூ.1 கோடி 50 லட்சம்
நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதேபோல
திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி,
கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர்,
நாகப்பட்டி னம் உள்ளிட்ட 7
மாவட்டங்களில் தொலைதூர மற்றும்
மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள 70
பள்ளிகளில் தகவல் தொழில்
நுட்பத்தை பயன்படுத்தி கணினி
வகுப்பறைகள் நிறுவவும் ரூ.58 லட்சம்
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயலாளர் சபீதா தெரிவித்தார்.