FLASH NEWS ; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி: 'மாநில அரசு வழங்கிய பதவி உயர்வை ஏற்க மறுத்து, அதை நிராகரித்தவர், திரும்ப பதவி உயர்வு கோர முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநில அரசு ஊழியர் ஒருவருக்கு, சில மாதங்களுக்கு முன் பதவி உயர்வு வழங்கப்பட்ட போது, அதை அவர் நிராகரித்துள்ளார். சில காரணங்களால், மீண்டும் அந்த பதவி உயர்வை, அந்த ஊழியர் கேட்ட போது, மாநில அரசு மறுத்தது. அதை எதிர்த்து அவர், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த போது, அந்த ஊழியருக்கு பதவி உயர்வு வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய பிரதேச அரசு, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. இந்த வழக்கு, நீதிபதி செலமேஸ்வரர் முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, 'பதவி உயர்வை நிராகரித்த அரசு ஊழியருக்கு, மீண்டும் அந்த பதவி உயர்வை வழங்கத் தேவையில்லை' என, உத்தரவிட்டார்.