ஆண்டுதோறும் ஆசிரியர்கள் தகுதிதேர்வுக்கு கோரிக்கை

பழநி : ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதிதேர்வு நடத்த அரசுமுன்வர வேண்டும், என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இலவச கட்டாய கல்வி சட்டத்தை அமுலாக்கியபின் அனைத்து மாநில அரசுகளும் ஆசிரியர் தகுதிதேர்வினை கட்டாயமாக்கி உள்ளன. ஆகையால் 2013ல் ஒருமுறை ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2014ல் மாற்றுதிறனாளிகளுக்கு மட்டும் சிறப்பு தேர்வு நடந்துள்ளது. ஆனால் பொதுத்தேர்வு நடக்கவில்லை. தற்போது ஏராளமான பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தபட்டுள்ளது. ஆகையால் அதிலுள்ள காலிபணியிடங்கள் நிரப்ப அரசு ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த முன்வர வேண்டும், என ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.