தொடக்க கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு : சென்னையில் நாளை நடக்கிறது.

தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி அலுவலர்மற்றும் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவிஉயர்வுக்கு உரிய 2ம் கட்ட கலந்தாய்வு நாளை சென்னையில்நடைபெறுகிறது.
தொடக்கக் கல்வித் துறையில் ஊராட்சி ஒன்றியநகராட்சிஅரசு
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்விஅலுவலராக பதவிஉயர்வு பெறுவதற்கு உரிய முன்னுரிமை பட்டியல்கடந்த ஜூலை மாதம் வெளியானது. 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம்தேதியை தகுதி நாளாக கொண்டு இப்பட்டியலில் 195 பேர் இடம்பெற்றனர்.இவர்களில் ஒன்று முதல் 30 வரை இடம்பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்,கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் உத்தரவுவழங்கப்பட்டதுஇதைத்தொடர்ந்து மீதம்உள்ள 165 பேர் தங்களுக்குஎப்போது பதவி உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில் முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 முதல்160 முடிய உள்ள தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மூலம் உதவி தொடக்க கல்விஅலுவலர்கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கப்பட உள்ளது.இதற்கான கலந்தாய்வு நாளை (25ம்தேதிசென்னை தொடக்க கல்வி இயக்ககூட்ட அரங்கில் காலை 10மணிக்கு நடைபெறும் என தொடக்க கல்வி இயக்குனரகம்தெரிவித்துள்ளது.