மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்க மத்திய அரசு திட்டம்

மொபைல் சிம் கார்டுடன் தனிப்பட்ட அடையாள எண் அல்லது ஆதார் எண்ணை இணைக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு யோசித்து வருகிறது.

இது குறித்து மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஆர்.எஸ்.சர்மா கூறியபோது, “தனிநபர் அடையாள எண்ணுடன் சிம் கார்ட் எண்ணை இணைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்” என்றார்.
இந்த யோசனையானது, தகவல் பெறுவதிலும், பரிமாற்றங்களிலும் ஒருவரை அடையாளப்படுத்திக் கொள்ள மொபைல் போன்கள் மிக மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. அப்படி இருக்கும்போது, இதனை இந்திய மக்கள் அனைவருக்குமான தளத்தில் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
மத்திய தகவல்தொடர்பு தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் தொழிலகம் வணிகத்துறை அமைப்பான எஃப்ஐசிசிஐ இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பேசியபின் செய்தியாளர்களிடம் சர்மா இதனைத் தெரிவித்தார்.