5% மதிப்பெண் தளர்வு செல்லும் தமிழ்நாடு அரசு அரசானையை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரை

இலவச கட்டாய கல்வி சட்டப்படி 1 முதல் 8 வரை ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயம் தமிழகத்தில் 3 தகுதி தேர்வுகள் நடைபெற்றது இதில் 2013 ல் நடைபெற்ற தகுதிதேர்வில் முதலில் 60% சதவீதம் தேர்ச்சி என்றும் பிறகு
5% தளர் அளிக்கப்பட்டு 55% மதிப்பெண் எடுத்தால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றதாக தமிழக அரசு அரசானனை எண் 25 வெளியிட்டது இந்த நிலையில் இதன் மூலம் பலர் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும பள்ளிகளில் வேலை பார்க்கிறார்கள். இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 5% மதிப்பெண் அரசானை 25 ரத்து செய்தனர்.

இதனை எதிர்த்து இதுவரை தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை ஆனால் தமிழ் நாடு முதல் அமைச்சர் தனிப்பிரிவில் மதுரையை சேர்ந்த ஜெகன் அவர்கள் அளித்த மனுவில் அரசு விரைவில் மேல்முறையீடு செய்யும் என தகவல் கொடுத்தனர். எப்படி இருந்தாலும் மீண்டும் 5% மதிப்பெண் தளர்வு பெற்று சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு உறுதி எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.
இலவச கட்டாய கல்வி சட்டப்படி 2010 ஆகஸ்ட் 23 க்கு பிறகு ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயமாக ஆசிரியர் தகுதி தேர்வு ஐந்தாண்டுகளில் எழுத வேண்டும் என்று உள்ளது ஆனால்அதற்கு முன் சான்றிதழ் சரி பார்த்தவர்களுக்கு விலக்கு அளித்து தமிழ் நாடு அரசு .. எண். 19850/சி5/2/2014 நாள் 01.10.2014 நாளிட்ட கடிதத்தில் தமிழக அரசு 2010 ஆகஸ்ட் 23 க்குள் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு அதற்கு பின் பணியில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வே தேவையில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
அப்படி என்றால் இலவச கட்டாய கல்வி சட்டம் முக்கியம் அதிலே இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்றால் எதை வைத்து சான்றிதழ் சரி பார்த்துவிட்டாச்சு அதனால் அவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை என கூறுவதால் அது நியயாம் என்றால் 5% மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்த்து அதில் ஒரு குறிப்பிட்ட நபர்கள் வேலைக்கே சென்றுவிட்டார்கள் என்றால் 5% மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு அந்த தேர்ச்சி செல்லும் என்று தானே அர்த்தம்
ஒரு வேளை மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த அரசானை 25 ரத்து செய்ததால் இனி வரும் தேர்வுகளுக்கு பொருந்தாதோ தவிர தற்போது சான்றிதழ் சரி பார்த்தவர்களுக்கு இந்த 5% மதிப்பெண் தளர்வு செல்லும்
நீங்கள் 10 ம் வகுப்பு படிக்கிறிங்க தேர்ச்சி பெற்று சான்றிதழ் வாங்குறிங்க
1 வருடம் கழித்து அந்த சான்றிதழ் செல்லாது அதனை கிழித்து போடுங்கள்
என்றால் கிழித்து போடுவிங்களா சான்றிதழ் அளித்த பின் அவை செல்லாது என கூறமுடியாது.
5% மதிப்பெண் தளர்வு மூலம் ஒரு குறிப்பிட்ட நபர்கள் வேலைக்கு போனதால் இவை செல்லும் இது நியாயம். சான்றிதழ் சரிபார்த்த பின் அவர்களுக்கு இனி வரும் ஆசிரியர் பணிநியமனங்களில் போட்டி போடும் உரிமை உள்ளது என்பது இதன் மூலம் நிரூபனம் ஆகியுள்ளது. எனவே இதை வைத்து 5% மதிப்பெண் தளர்வு பெற்ற நபர்கள் யாராவது உயர் நீதிமன்றம் சென்னையில் வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு அந்த சான்றிதழ் செல்லும் என உயர் நீதிமன்றம் கண்டிப்பாக கூறும் ஆனால் இனி வரும் தேர்வுகளில் வேண்டுமானல் 5% மதிப்பெண் தளர்வு இருக்ககாது.
Article by
கார்த்திக் பரமக்குடி