பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41 குறைக்கப்பட்டது

பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2-க்கு மேல் குறைக்கப்பட்டது. | கோப்புப் படம். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு முறையே ரூ.2.41 மற்றும் ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வருகிறது.


நகரவாரியாக பெட்ரோல் விலைக்குறைப்பு விவரம்:

டெல்லியில் லிட்டர் ரூ.66.65 என்பது ரூ.2.41 குறைந்து லிட்டர் ரூ.64.24 ஆகிறது.

சென்னையில் லிட்டர் ரூ.69.59 என்பது ரூ.2.58 குறைந்து லிட்டர் ரூ.67.01 ஆகிறது.

கொல்கத்தாவில் ரூ.72.21 என்பது ரூ.2.53 குறைந்து லிட்டர் ரூ.71.68 ஆகிறது.

மும்பையில் ரூ.74.46 என்பது ரூ.2.49 குறைந்து ரூ.71.91 ஆகிறது.

டீசல் விலைக்குறைப்பு விவரம்:

சென்னையில் லிட்டர் விலை ரூ.59.27 ஆக இருந்தது ரூ.2.43 குறைந்து ரூ.56.84 ஆகிறது.

டெல்லியில் ரூ.55.60 ஆக இருந்த விலை ரூ.2.25 குறைந்து ரூ.53.35 ஆகிறது.

கொல்கத்தாவில் ரூ.60.30 ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.35 குறைந்து ரூ.57.95 ஆகிறது.

மும்பையில் ரூ.63.54ஆக இருந்த விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்து ரூ.61.04 ஆகிறது.