TET CASE

ஆசிரியர் தகுதிதேர்வில் வெய்டேஜ் முறை மற்றும் 5% இட
ஒதுக்கீட்டுக்கு எதிராண அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது 


தகுதி தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிஇடங்கள் நிரப்ப பட்டு வருகிறது . இந்த பணியை ஆசிரியர் 
தேர்வு வாரியம் செய்து வருகிறது.

ஆசிரியர் தகுதிதேர்வில் பெரும் மதிப்பெண்ணுடன் பிளஸ்டூ,
பட்டபடிப்பு ,பி.எட் ,ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் 
பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்பொழுது பணிநியமனம் நடைபெறுகிறது . இந்த வெய்டேஜ் முறைக்கு ஆசிரியர்களின் 
மத்தியில் எதிர்பு கிளம்பியது .

வெய்டேஜ் முறையில் ஆசிரியர் தேர்வு செய்யபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் வெய்டேஜ் முறை மற்றும் 5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது . இந்த தீர்ப்பில் வெய்டேஜ் முறை மற்றும் 5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான
அணைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது .

நீதிபதிகள் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுகொண்டுதான் 
தேர்வு எழுதுனீர்கள் இப்பொழுது அதை எதிர்ப்பது தவறு என்று
 கூறி அணைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்கள் . இந்த 
தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனதிர்க்கு எதிராக வழங்கப்பட்ட 
தடை நீங்குகிறது .

இந்த தீர்ப்பு போராட்ட காரர்க்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளதாக போராட்டகார்கள் கூறுகிறார்கள் .

ஆசிரியர் கலந்தாய்வை முடித்தவர்கள் பணிநியமன அறிவிப்பு 
அரசிடம் இருந்து எந்த நேரத்திலும் வரும் என்று எதிர்பார்ப்பில் 
உள்ளனர் .