CTET மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதித்தேர்வு, கோவையில் நான்கு மையங்களில் நேற்று நடந்தது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் உட்பட பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்றுவதற்கான தகுதித்தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 
        கோவை மாவட்டத்தில், 1,5௦௦ பேர் விண்ணப்பித்தனர். கோவையில், அங்கப்பா சி.பி.எஸ்.இ., பள்ளி, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி, சுகுணா பிப் பள்ளியில் தேர்வு நடந்தப்பட்டது. இதில், 1,243 பேர் தேர்வெழுதினர்; 257 பேர் பங்கேற்கவில்லை. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு காலை 8:30 மணி முதல் 11:00 மணி வரையும், 6,7,8,9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, பிற்பகல் 2:௦௦ மணி முதல் மாலை 4:30 மணி வரை என இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது. தேர்வுகளை, ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் கண்காணித்தனர். இத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக, தேர்வெழுதிய ஆசிரியர்கள் தெரிவித்தனர்.