அரசு டாக்டர் பணிக்கான போட்டி தேர்வு ரத்து

இன்று நடக்க இருந்த, அரசு டாக்டர்கள் நியமனத்திற்கான  போட்டித் தேர்வை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், ரத்து செய்து உள்ளது.

           தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 34 உதவி பல் டாக்டர் உட்பட, 2,176 உதவி டாக்டர்களை தற்காலிகமாக நியமிக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதை, போட்டித் தேர்வு மூலம் நிரப்பும் வகையில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான போட்டித் தேர்வு, சென்னையில் இன்று (செப்., 28), மூன்று இடங்களில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
         இதற்கான ஏற்பாடுகளை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் செய்திருந்தது. இந்த நிலையில், திடீரென போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வில் பங்கேற்போர் வேண்டுகோளின் பேரில், தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும் எனவும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.