ஆசிரியர்களுக்கு நன்றி': மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு.

"ஆசிரியர்களுக்கு நன்றி” என்ற தலைப்பில், செப்.5ம் தேதி கொண்டாடப் படவுள்ள ஆசிரியர் தினத்தின் பெருமையைப் போற்றும் விதத்தில் ஒரு வீடியோ பதிவை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது,.

ஆசிரியர்களுக்கு நமது நன்றியைச்செலுத்தும் விதமாக இந்த தினத்தை நாம் அணுக வேண்டும் என்று அந்தக் குறிப்பில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயரில் அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.