சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து பதவி ஏற்பு


புதுடெல்லி, செப்.29-சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். தலைமை நீதிபதி பதவி ஏற்புசுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.எம்.லோதா நேற்று
முன்தினம் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறுவதையொட்டி முன்னதாக புதிய தலைமை நீதிபதியாக 63 வயது எச்.எல்.தத்துவை மத்திய அரசு நியமித்து இருந்தது. இதைத்தொடர்ந்து தத்து நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகை தர்பார் அரங்கில் 11 மணியளவில் நடந்த எளிய விழாவில் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். கலந்து கொண்டோர்நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, டெல்லி மேல்-சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், வெங்கையா நாயுடு, அனந்த்குமார், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்.எம்.லோதா, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.14 மாதம் பதவி வகிப்பார்எச்.எல். தத்து சுப்ரீம் கோர்ட்டின் 42-வது தலைமை நீதிபதி ஆவார். தற்போது, அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த வழக்கு விசாரணையை கண்காணிக்கும் அமர்வின் தலைவராக இருக்கிறார். இவர், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி முடிய 14 மாத காலத்திற்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.வாழ்க்கை குறிப்புகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எச்.எல்.தத்து, 1950-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி பிறந்தார். அவருடைய முழுப்பெயர் ஹந்த்யலா லட்சுமிநாராயணசாமி தத்து என்பதாகும். வக்கீல் படிப்பை முடித்ததும் 1975-ம் ஆண்டு தத்து வக்கீலாக பதிவு செய்து கொண்டார். பெங்களூரில் சிவில், கிரிமினல், வரி மற்றும் அரசியலமைப்பு முதலிய வழக்குகளில் பயிற்சி எடுத்தார்.1983-ம் ஆண்டு முதல் கர்நாடக ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகளுக்கு ஆஜரானார். அப்போது விற்பனை வரித்துறைக்கு அரசு வக்கீலாகவும் இருந்தார். 1995-ல் கர்நாடக மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார்.2-வது நீதிபதி2007-ம் ஆண்டு சத்தீஷ்கார் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எச்.எல்.தத்து 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட 2-வது நீதிபதி தத்து ஆவார். நேற்று முன்தினம் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்.எம்.லோதா கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.