354 சிறைக்கைதிகள் 8-வது வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் 25-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது


சென்னை, செப்.22-25-ந் தேதி 354 சிறைக்கைதிகள் 8-வது வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். 4 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது.8-வது வகுப்புதமிழக சிறைக்கைதிகள் கல்விக்கற்பதில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். வருகிற 25-ந்தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை 8-வது வகுப்பு பொதுத்தேர்வு
தனித்தேர்வர்களுக்கு நடைபெறுகிறது. இந்த தேர்வில் 354 சிறைக்கைதிகள் கலந்துகொள்கிறார்கள்.சென்னை புழல் சிறை, கோவை சிறை, திருச்சி மற்றும் பாளையங்கோட்டைசிறைகளில் உள்ள 4 தேர்வு மையங்களில் இந்த தேர்வு, கைதிகளுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் 72 பேரும், கடலூர் சிறைக்கைதிகள் 15 பேர், வேலூர் சிறைக்கைதிகள் 23 பேர், வேலூர் பெண்கள் சிறைக்கைதிகள் 9 பேர், கோவையில்72 பேர், சேலம் சிறைவாசிகள் 20 பேர், திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டையில் 91 பேர், பாளையங்கோட்டையில் 52 பேர், தேர்வு எழுத உள்ளனர்.பாடம் நடத்துகிறார்கள்இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை, அரசு தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் செய்து வருகிறார். சென்னை புழல் சிறையில் தன்னார்வ தொண்டு ஆசிரியர் ராஜேந்திரன், பட்டதாரி கைதிகள் புதுராஜா, சேக்தாவூத், செல்வராஜ் ஆகியோர் பரீட்சை எழுதும் கைதிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள். இவர்களில் புதுராஜா அரசு அதிகாரியாக பணியாற்றிவர், என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறந்த ஓவியர் மற்றும் கவிதை எழுதுவதிலும் புலமை பெற்றவர். கைதிகளுக்கு ஓவியப்பயிற்சியும் கொடுத்து வருகிறார்.