முதலாம் உலகப் போரின்போது சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நாளையுடன் 100 ஆண்டுகள் நிறைவு

உலகப்போரின் கதாநாயகன்

குண்டுவீசி பெரிய அளவில் பொருள் சேதத்தை ஏற்படுத்திய எம்டன் கப்பல் கண் இமைக்கும் நேரத்தில் சென்னையை விட்டு ஆழ்கடலுக்கு பயணிக்க தொடங்கியது. ஆங்கிலேய கடற்படை பின்தொடர்ந்தும், எம்டன் கப்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆங்கிலேய படைக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்த எம்டன் கப்பல், 1908-ம் ஆண்டு ஜெர்மானிய நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. இதில், சுமார் 20 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் போது, கதாநாயகனாக விளங்கிய எம்டன் போர் கப்பல், எதிரி நாட்டுக்கு சொந்தமான 30 போர் கப்பல்களை அழித்து கடலில் மூழ்கடித்து இருக்கிறது.

நினைவு கல்வெட்டு

அந்த எம்டன் கப்பலும் 1914-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி, ஆஸ்திரேலியா போர் கப்பலால், சிட்னி துறைமுகம் அருகேயுள்ள கொக்கோஸ் தீவுப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டது. ஆனாலும், எம்டன் கப்பலின் முகப்பு பகுதி இன்னும் தண்ணீருக்கு வெளியே தெரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஜெர்மனி நாட்டு கொடியும் கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் எம்டன் கப்பல் குண்டு வீசிய பகுதியான, ஐகோர்ட்டில் நீதிபதிகள் குடியிருப்பு முகப்பு வாயிலில் நினைவு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிக்காமல் கிடந்த குண்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி அரசு கவுரவம்

எம்டன் கப்பலில் வந்து குண்டு வீசிய செண்பகராமனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. எம்டன் கப்பல் வீழ்த்தப்பட்டபோது, அதில் இருந்த 133 வீரர்கள் கடலில் மூழ்கி இறந்தனர். அவர்களது குடும்பத்தினர் இன்றைக்கும் ‘எம்டன்’ என்ற பெயரை தங்களது பெயருக்கு முன்னால் வைத்துக் கொள்கின்றனர். இதற்கான கவுரவத்தை ஜெர்மனி அரசு அந்த குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது. வேறு யாரும் அந்தப் பெயரை பயன்படுத்த முடியாது.

தமிழ்நாட்டிலும் ‘எம்டன்’ என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. ஆனால் இது பெருமைப்படுத்தும் விதமான பெயராக பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அதிக கோபம், பிடிவாதம் கொண்டவர்களை, ‘‘இவன் சரியான எம்டன்பா...’’ என்று கூறுவதை அன்றாடம் கேட்கலாம்.

தேடும் நிலையில் அடையாளம்

சென்னையில் எம்டன் கப்பல் குண்டு மழை பொழிந்து, நாளையுடன் (திங்கட்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. என்றாலும், எம்டன் என்ற சொல், இன்றளவும் தமிழர்களின் பேச்சில், மூச்சில் கலந்துவிட்ட ஒன்றாகவே மாறிவிட்டது.

100 ஆண்டுகளை கடந்துவிட்டபோதும், சென்னையில் எம்டன் கப்பல் குண்டு வீசியதை நினைவுகூரும் அடையாளங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. சாலையில் உள்ள மைல் கல்லைப்போல, இதற்கான நினைவு கல்வெட்டு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதுகூட தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது.

எனவே, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, எம்டன் கப்பல் குண்டு வீசிய நிகழ்வை அனைவரும் அறியும் வண்ணம் அடையாளம் காட்டி, மறைந்து கொண்டிருக்கும் ஒரு வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பா