ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தொடக்கப் பள்ளிஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


காரைக்குடி, ஆக.22-ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.தரமான ஆசிரியர்கள்அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
பொதுச்செயலாளரும், உலகக் கல்வி அமைப்பின் துணைத் தலைவருமான ஈசுவரன் காரைக்குடியில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-பள்ளிகளில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணிபுரிவதை நிறுத்தி அவர்களுக்கு உரிய பயிற்சியை அளித்து தரமான ஆசிரியர்கள் பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். 6-வது ஊதியக்குழு அமல்படுத் தப்படாத மாநிலங்கள் உடன டியாக அமல்படுத்த வேண் டும். 7-வது ஊதியக்குழு பரிந் துரைகளை ஆராய்ந்து முடிவு களை விரைந்து அறிவிக்க வேண்டும்.தகுதித்தேர்வுபங்களிப்பு ஓய்வூதிய திட் டத்தினை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல் படுத்திட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து பயிற்சியின் போதே நல்ல பயிற்சியைஅளித்து தரமான ஆசிரியர்களை தயார் செய்து அனுப்ப வேண்டும். தமிழ் நாட்டை பொறுத்தவரை இடை நிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் ஏற்படும் பாதிப்பு களை களைந்து 9300-34800 மற்றும் தர ஊதியம் 4,200 அளித்து, மாதம் ஒன்றுக்கு ரூ.9,580 ஏற்படும் பாதிப்பை நீக்கி நிவர்த்தி செய்ய வேண் டும்.பொது மாறுதல்களில் ஆசி ரியர்களை போராட்ட சூழ் நிலைக்கு தள்ளாமல் காலிப் பணியிடங்களை ஒளிவுமறைவு இன்றி வெளிப்படுத்தி, முறை யான கலந்தாய்வு நடைபெற தொடக்கல்வித் துறை நட வடிக்கை மேற்கொள்ள வேண் டும். அறிவிப்பு இன்றி போராட்டம் நடந்தால் கடுமையான தண்டனை என்று அறிவிப்பதை விட அந்தச் சூழல் வராமல் அரசு முன்னெச்சரிக்கை நட வடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில பொருளாளர் ஜோசப் சேவி யர், மாநில பொதுச் செயலா ளர் ரங்கராஜன், நிர்வாகிகள் அன்பரசு பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.